Wednesday, July 07, 2010

அன்று பெய்த மழையில்

அன்று பெய்த மழையில்
                       அவள் நினைவுகள்…
இன்று உறைத்த வெயிலினில்
                       அவள் உணர்வுகள்…
கண் மூடலின் இருளில்
                       அவள் உளறல்கள்…
தழுவிச் செல்லும் தென்றலில்
                       அவள் உரசல்கள்…
என் காதோர நரையில்
                      காத்திருப்பின் சலிப்புகள்…
என்னை வாட்டும் ஆசையில்
                     அவள் நினைவுகள்…
அதுவே என் உயிராகிப் போன
                      என் உணர்வுகள்…

சோளக்கொள்ளை பொம்மை

எனக்கான சூரியன் அதிகாலை உதிக்க …
என் இரவுகள் நீண்டு கொண்டு போக …
என் வீட்டு பட்ஜெட் அதிகரிக்க …
என்னின் பொழுதுகள் எதிர்பார்புகளால் நிரம்ப ..

தொடங்கியது நீ என் தெருவில் வந்த பிறகு !!!

என்னின் தவறுகள் திருத்தப்பட …
ரசனைகள் மேம்பட ---
உணர்வுகள் நயம்பட ---
எதிர்காலம் வளப்பட ---

தொடங்கியது நீ என் வாழ்வில் வந்த பிறகு !!!


கோல மயிலே! நீ அல்ல … உன் நினைவுகள் பிரிந்தாலும்
நான் சோளக்கொள்ளை பொம்மை!!!

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...