முதல் இரண்டு பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Macbeth - Story of Shakespeare's Drama - Part 1
Macbeth - Story of Shakespeare's Drama - part 2
Macbeth - Story of Shakespeare's Drama - Part-3
ஸ்காட்ட்லண்டின் அரச பதவி எனும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தன்னை தேடி வந்த போதிலும், அதை அடைய தீய வழியை தேர்ந்தெடுத்த காரணத்தினால் அதை அனுபவிக்க முடியாத அவல நிலையில் இருந்தனர் அரசனும் அரசியும். இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டும், தன் எதிகாலத்தை அறிந்து அதன் மூலம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியும் அந்த சூனியக்காரிகளை மீண்டும் சந்தித்தான் மக்பெத். அரசனின் வேண்டுகோளுக் கிணங்க மற்றுமொரு மூன்று ஆரூடங்களை சொல்லினர்.
"அரசனே, இயற்கையாக பெண்ணின் பிரசவத்தில் பிறந்த எவராலும் உனக்கு மரணம் ஏற்படாது".
"மேலும் பிர்னாம் காடுகள் கூட்டமாக இடம் பெயர்ந்து வரும்போது உனக்கு மரணம் சம்பவிக்கும்".
"அதற்கு காரணமாக மக்டுப் (Macduff ) என்பவன் இருப்பான்".
"மேலும் பிர்னாம் காடுகள் கூட்டமாக இடம் பெயர்ந்து வரும்போது உனக்கு மரணம் சம்பவிக்கும்".
"அதற்கு காரணமாக மக்டுப் (Macduff ) என்பவன் இருப்பான்".
இதை கேட்ட மக்பெத், காடுகள் நகர்ந்து வருவதும், பெண் மூலம் பிறக்கா ஒருவனும் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்பதால் மகிழ்ச்சியோடு அரண்மனை திரும்பினான். அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தன் கைகளில் இருந்து வரும் இரத்த வாடையை சகிக்க முடியாமல் அரசி லேடி மக்பெத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி இடியை விட கோரமாக தாக்கியது.
இந்நிலையில் இங்கிலாந்தில், இளவரசர் மால்கம், தளபதி பாங்கோவின் மகன் ப்லீன்சே உடன் சேர்ந்து தனக்கு எதிராக படை திரட்டும் செய்தி வந்து சேர்கிறது. அதற்கு ஆதரவாக இங்கே பிரபு ஒருவர் அரசரின் எதிர்பாளர்களை ஒன்று திரட்டுகிறார் என கேள்விப்பட்டு மிகவும் ஆத்திரம் அடைகிறான் மக்பெத். ராஜதுரோகத்தில் ஈடுபட்ட அந்த பிரபுவை குடும்பத்துடன் கொன்று விடுமாறு ஆணை பிறப்பிக்கிறான். ஆணையை நிறைவேற்றிய வீரர்கள் மீண்டும் வந்து, "அரசே.. மக்டுப் பிரபு தப்பி விட்டார், அவரின் குடும்பத்தினர் கொல்லபட்டனர் " என்றனர். மக்டுப் என்ற பெயரை கேட்டவுடன் அரசரின் முகம் ஏன் அப்படி மாறியது என்று விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் வீரர்கள். தப்பிச்சென்ற மக்டுப் பிரபு, நாட்டின் எல்லையில் படை திரட்டும் இளவரசர் மால்கமுடன் சேர்ந்து கொள்கிறான். தன் குடும்பத்தை கொன்ற மக்பெதை தன் கைகளால் கொல்வேன் என சூளுரைக்கிறான்.
இங்கிலாந்த் நாட்டு படைகள் இளவரசர் மால்கமின் ஆணைகிணங்க, தளபதிகள் மக்டுப் மற்றும் ப்லீன்சே தலைமையில் ஸ்காட்ட்லண்டை நோக்கி விரைந்தது. அதை கேள்விப்பட்ட மக்பெத் மாபெரும் படையுடன் அவர்களை எல்லையில் எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டான். எல்லையில் இரு நாட்டு படைகளும் வீராவேசமாக மோதிக் கொண்டன. போரின் நிகழ்வுகளை தெரிவிக்க வந்த தூதன், அரசன் மக்பெதின் முன் மூச்சு வாங்க நின்றிந்தான். அவனை நோக்கி மன்னர்,
" தூதனே, ஏன் உன் முகத்தில் இத்தனை பதற்றம்."
இங்கிலாந்த் நாட்டு படைகள் இளவரசர் மால்கமின் ஆணைகிணங்க, தளபதிகள் மக்டுப் மற்றும் ப்லீன்சே தலைமையில் ஸ்காட்ட்லண்டை நோக்கி விரைந்தது. அதை கேள்விப்பட்ட மக்பெத் மாபெரும் படையுடன் அவர்களை எல்லையில் எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டான். எல்லையில் இரு நாட்டு படைகளும் வீராவேசமாக மோதிக் கொண்டன. போரின் நிகழ்வுகளை தெரிவிக்க வந்த தூதன், அரசன் மக்பெதின் முன் மூச்சு வாங்க நின்றிந்தான். அவனை நோக்கி மன்னர்,
" தூதனே, ஏன் உன் முகத்தில் இத்தனை பதற்றம்."
" வீரத்தின் உறைவிடமான எங்கள் அரசனே, அளவில் பெரிய நம் படைகள் மிக சுலபமாக எதிரிகளின் படைகளை தடுத்து நிறுத்தின. ஆனால் !"
"என்ன ஆனால்?" என உறுமினான் மக்பெத்.
" அரசே! தெற்கு எல்லையில் இருந்து நம்முடன் போர் புரிய பிர்னாம் காடுகளே நகர்ந்து வருகின்றன."
திடுக்கிட்டு திரும்பிய அரசன், வேக வேகமாக அரண்மனையின் உச்சிக்கு சென்று பிர்னாம் காடுகளை உற்று நோக்கினான். தூதன் சொன்னது போல், காடுகளின் மரங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.
மக்டுப்பின் தலைமையிலான ஒரு படை, பிர்னாம் காட்டு மரங்களின் பட்டைகளை பிளந்து முன்னும் பின்னும் கட்டிக்கொண்டு மரங்களோடு மரங்களாக நின்று இருந்தனர். மக்பெதின் படைகள் எல்லையை நோக்கி சென்ற பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கோட்டையை நெருங்கி விட்டனர் . அவர்களை எதிர்க்க கோட்டையில் சொற்ப எண்ணிகையில் தான் வீரர்கள் இருந்தனர். இந்த இக்கட்டை கண நேரத்தில் புரிந்து கொண்ட அரசர், இனி தானே தலைமை தாங்கி நம்மை நோக்கி வரும் மரங்களை மண்ணுக்கு இரையக்குவோம் என கர்ஜித்தான். இயற்கையாக பிறந்த எவன் ஒருவனாலும் தன்னை வெல்ல முடியாது என்பதால், தான் உயிரோடு உள்ள வரை எதிரிகளின் தந்திரங்கள் வெல்லாது என்று உறுதியாக நம்பினான். எண்ணற்ற போரில் தன் வீரத்தால் எதிரிகளை நிலை குலைய செய்த மாவீரன் மக்பெத், இன்று ஆருடத்தின் தயவால் தாம் வென்றுவிடுவோம் என்ற நிலையை கொண்டிருப்பது யாருடைய விதிபயனோ?
அரசரின் தலைமையில் கோட்டை காவல் படையும், மக்டுப்பின் தலைமையிலான படையும் மிக கடுமையாக மோதிகொண்டன. போர்க்களத்தில் அரசன் மக்பெத் மற்றும் மக்டுப் இருவரும் எதிரெதிரே சந்தித்து கொண்டனர். மக்பெதின் வீரத்திற்கு முன் மக்டுப்பின் வீரம் கொஞ்சம் குறைந்தே காணப்பட்டது. பழி வாங்கும் வெறி மட்டுமே பிரதானமாக இருந்தது.
அரசன் மக்டுப்பை பார்த்து, " வீரனே... உனக்கு இறுதியாக எச்சரிக்கை செய்கிறேன். என் காலில் விழுந்து தோல்வியை ஒப்புக்கொண்டால் உனது உயிர் உனதாகும், இல்லையேல் அது எனதாகும்".
மக்டுப் கண்களில் வெறி மின்ன, " கேடு கேட்ட அரசனே, நான் பிறக்கும் போதே தாயின் கருப்பையை பிளந்து பிறந்தவனடா. மூர்க்கம் எனது குணம். உனது தலையை நான் பந்தாடப் போவது உறுதி " என முழங்கினான்.
இயற்கையான முறையில் பிறவாமல் கருப்பையை அறுத்து ( சிசேரியன் ) எடுக்கப் பட்டவன் என்பதை கேட்டவுடன், மாபெரும் வீரனான மக்பெத் கோழை ஆனான். கடவுள் தன்னை கொல்ல அனுப்பிய தூதனிடம் போரிட துணிவில்லாமல் மக்டுப்பினால் கொல்லப்பட்டான் அரசன் மக்பெத். தீய வழியில் செயற்பட்டு எவ்வளவு பெரிய பதவியை நாம் அடைந்தாலும், நம்முள்ளே இருக்கும் மனம் நமக்குரிய தண்டனையை கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகிப்போனது மக்பெதின் வாழ்க்கை.
வெற்றி இளவரசனாக பவனி வந்த வருங்கால ஸ்காட்ட்லண்டின் அரசன் மால்கமுக்கு பரிசாக, மக்பெதின் வெட்டுப்பட்ட தலையை வழங்கினான் மக்டுப். அதற்கு பாராட்டாக தளபதி பதவி வழங்கப்பட்டது. மால்கமின் அரசாட்சி, தளபதிகள் மக்டுப் மற்றும் ப்லீன்சே தலைமையில் நெடுங்காலம் நடந்தது.
முற்றும்.