ஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை.
சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும்
அவன் ஆணுக்கு அளிக்கவில்லை.
உண்ணப்படுவதற்கான உதடுகளையும்
பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை.
கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை.
அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..
-- -
வெண்முரசு - நூலில், ஜெயமோகன்