என்ன தான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியில் அதுவும் தமிழ் மொழியில் படிப்பதில் வரும் களிப்பே அலாதி தான். ஆங்கிலத்தில் படிக்கும் பொது அர்த்தம் அறிவுக்கு தட்டுபட்டாலும், தமிழில் படிக்கும்போதுதான் மனம் அமைதியுடன் அந்த வாசிப்பு அனுபவத்தை கொண்டாடுகிறது. தமிழை படிக்கத் தேவையில்லை, கண்கள் அதை கடந்து சென்றாலே மூளை அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறது. ஆனால் அங்கிலம் என்றாலோ, முதலில் படித்து (பல நேரங்களில் spelling கூட்டி), பின்பு இதனை வருடங்களாக நமக்கு கற்பிக்க பட்டு நம் அறிவில் பதிந்து வைத்திருக்கும் dictionary -இல் தேடி( அநேகமாக அதில் இருக்காது), பல நேரங்களில் google or lifco வை நாடி அர்த்தம் புரிந்து கொள்ளுதலில் ஒரு ஆயாசமே இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் எழுத்துக்கள் பரவலாக பயன்பாட்டில் இல்லாத பொழுது சில இணைய எழுத்தாளர்கள் மட்டும் மிக பிடிவாதமாக தமிழ் அவர்களின் சிந்தனையை எழுதி வந்தார்கள். அதில் என்னை ஈர்த்தது சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள். மிக அருமையான நடையில் இயல்பான நையாண்டியில் அந்தரங்க அவதானிபுகளுடன் அவர் எழுதியது மிகவும் கவர்ந்தது. ( புத்தகம் வாங்க வேண்டிய செலவு கூட இல்லை என்பது மற்றுமொரு முக்கிய காரணம்.) அப்படி எழுதி செல்லும்போது அவரை போன்றே இணையத்தில் சிறப்பாக எழுதி வரும் சில லிங்குகளை கொடுப்பது வழக்கம். அதில் எனக்கு அறிமுகமானது தான் R P ராஜநாயஹம் அவர்களின் blog .
R P ராஜநாயஹம் - ஒரு தகவல் களஞ்சியம். அவருடைய எழுத்துகள் அனைத்தும் தகவல்களால் நிரம்பியவை. இரு தலைமுறை சினிமாவின் தகவல் பொக்கிஷம் அது. வெறும் தகவல் மட்டும் என்றால் எப்படி சுவாரசியமாக இருக்கும்? அத்தகவல்களை மிக சரியாக தன் கட்டுரையில் இடம் பெற செய்து நையாண்டி மற்றும் நகைச்சுவையுடன் கூடிய சரளமான நடையில் அவர் எழுதும் கட்டுரைகள் ஒரு பொக்கிஷமே.
கீழே உள்ளது, அவரின் blog இல் படித்த கவிஞர் தென்பண்டியனின் கவிதை. மிகவும் எளிய வார்த்தைகளால் எழுதப்பட்ட கவிதை என் நினைவுகளில் தனி இடத்தை பிடித்து கொண்டது.
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும் - - - அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன் - - - அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் - - - பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.
-- தென் பாண்டியன்
மிக முக்கிய குறிப்பு: உத்தமர்கள் இதோடு நிறுத்திவிட்டு தன் comment யை பதிவு செய்து போகவும். ( அப்படி செய்யாமல் மேற்கொண்டு படித்து விட்டு சீ.... சீ என்று திட்ட கூடாது. )
அவருடைய கட்டுரையில் அவரால் ரசிக்கப்பட்ட சிலரின் படைப்புகளை தனக்கே உரித்தான பாணியில் சொல்லி இருபது ரசிக்கும் படி இருக்கும். அப்படி கவிஞர் தமிழ்நாடன் பற்றிய பதிவில் அவர் குறிபிட்ட இந்த கீழ்க்கண்ட கவிதை தமிழின் பால் எனக்கு இருந்த காதலை இன்னும் ஆழப்படுத்தியது.
”கும்பகோணமாய் இருக்கும் கொங்கை என்றேங்கி
கும்பகோணத்தாளைக் கொண்ட சங்கரன் அம்பிக்கு
முதல் நாளில் முதல் நிர்வாணத்தில்
மங்கை கொங்கை தொங்கு சலாம் போட்டது.”
– தமிழ் நாடனின் ’காமரூபம்’ கவிதைகள்
இதை போன்றே அவரின் "படாத பாடு பட்ட பட்டோடி" - பதிவு நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைத்துவிடும். (http://rprajanayahem.blogspot.in )

No comments:
Post a Comment
Type your comments...