மேனேஜிங் டைரக்டர் - பிறந்த நாள் வாழ்த்து
ARS Group - MD ன் பிறந்த நாள் விழாவில் நான் எழுதி வாசித்த வாழ்த்து மடல்
அகிலத்தின்
விளக்கேயான... அமரரும் வாழ்த்தி நிற்க
ஞானத்தின்
விளக்கேயான … ஞானியரும்
போற்றி நிற்க
வானத்தின்
விளக்கேயாகி … வந்ததொரு
தலைமகனின்
பிறந்த
நாள் வாழ்த்து பாட
வசன கவிதை ஒன்றை வடித்து
வந்தேன்.
தவறிருந்தால்
மன்னியுங்கள்
கருத்திருந்தால் தட்டுங்கள்.... கைகளை
தட்டுங்கள்....
தவமிருந்தும்
கிடைக்காத மனித பிறவியில்
தான்
வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் மனிதம்
நீ!
நீ துயிலும் கணம் அறிந்ததில்லை...
உன் வாழ்வில் சூரியன் மறைந்ததில்லை....
நீ களைப்புற்று கண்டதில்லை...
நிலவை போல் அரவணைக்க மறந்ததில்லை....
செழித்த
மரத்தையே சுற்றி படருமாம் கொடி....
படர்ந்த கொடி செழிக்கவே...
படை ஒன்று கொண்டு
பாதை ஒன்று அமைத்து
பரிவுடன் படை நடத்தும்
பாசமிகு ஆசானே.....
இந்த தாய் தாண்டிய தூரத்தை... தாண்டி குதிக்கும் ஆசையோடு
எண்ணற்ற
திட்டங்களோடு
துடுக்கான
படையோடு
தங்களின் தவப்புதல்வன்
அவர் கரம் பற்றி... கருத்துக்களை திருத்தி …
களத்திலே விளையாட …
நெறியுடன் நடை போட …
பாதை
ஒன்றை வகுத்து தந்தாய்....
நீர் சுட்டும்
இலக்குகளை
நீர் காட்டும்
வழியினிலே
நீர் அமைத்த
கொள்கை வழி
ஈட்டிட படை
இங்கு ரெடி …
உங்கள்
பிறந்த நாள் வாழ்த்தாய்.... நாங்கள்
சூளுரைக்கிறோம்
இனி ARS ன்
எல்லைகளை
இந்தியா முழுமைக்கும்
கொண்டு செல்வதே
எங்களின் தலையாய
பணி.
தலைவனின் ஆசிக்காக
தலை வணங்குகிறோம்.....
தலைமகனே....
வாழ்த்துங்கள்...
வளர்கிறோம்....
No comments:
Post a Comment
Type your comments...