குடும்ப சண்டை
வார்த்தை சண்டைகளின் போது
அமைதியுடன் தோல்வியை தழுவுபவர்,
அடுத்து வரவிருக்கும் ஆக பெரும் (ஆயுத) சண்டையை
தவிர்த்ததில் வெற்றி பெற்று விடுகிறார்.
* * * * * * * * *
ஆரோக்கியமான விவாதம் என்று ஆரம்பிக்கப்பட்டு
இறந்த கால ஆதங்கங்களை கொட்டும் களமாக மாறும் போது தான்
மன விரிசலுக்கான விதை விதைக்கபடுகிறது.
* * * * * * * * *
உச்சி ஆதவன் உஷ்ணத்தில் ரொம்பவே எரிச்சல் மூட்டும் பொழுது,
அவன் காலையில் கொடுத்த சுக வெயில் நினைவுக்கு வர மறுக்கிறது.
களத்தில் காயங்கள் பலமாயினும்....
கடுகளவு காதல் மீதமிருப்பின்...
வெற்றி பின்பு பகிர்ந்தளிக்கப்படும்.
Good experience should come out by words... ரூமுக்குள் யோசித்ததை sorry ... ரூம் போட்டு யோசித்ததை ஷேர் பண்ணியதற்கு நன்றி !!
ReplyDelete