Wednesday, February 12, 2014

விவேக சிந்தாமணி


இந்த உலகத்தில் பயனற்றவை என எதுவுமில்லை. ஆம் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பர். உண்மை தானே... ஆனால் உலகத்தில் பயனற்றவை என எழு விசயங்களை வரிசைபடுத்துகிறது நம் பழங்கால இலக்கியமான விவேக சிந்தாமணி.   

1. நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்குத் துணையாய் இருக்காத பிள்ளைகள்
2. பசித்த நேரத்தில் கிடைக்காத உணவு
3. தாகம் எடுத்த நேரத்தில் கிடைக்காத தண்ணீர்
4. குடும்பத்தின் வறுமை நிலையை பற்றி கவலை இல்லாமல் மனம்போன போக்கில் செலவுகளைச் செய்து வாழும் பெண்கள்
5. தகுந்த நேரங்களில் தவிர்த்து மற்ற நேரங்களில் தனது கோபத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாத அரசன்
6. தனக்கு வித்தைகற்றுத் தரும் ஆசிரியனின் அறிவுரைகளை மதித்து நடக்காத மாணவன்
7. பாவங்களைப் போக்காத புண்ணியதீர்த்தம்

யோசித்துப் பாருங்கள். அனைத்தும் அப்பட்டமான உண்மைகள். அந்த பாடல்.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே.


********

ஐயப்ப பக்தர்கள் அனைவர்க்கும் வீரமணியின் பாடல்கள் நிச்சயம் தலைகிழ் மனப்பாடம். அதிலும் கிழேயுள்ள பாடல் நன்கு அறிமுகம்.

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.


இந்த பாடல் விவேக சிந்தாமணியின் கடவுள் வாழ்த்துப் பாடல்.

நீதிக் கருத்துக்களை பாடல்களின் மூலமாக கூறும் அதே வேளை பல்வேறு சுவை ததும்பும் பாடல்களும் கலந்து அழகு படத் தொகுக்கபாட்ட நூலே விவேக சிந்தாமணியாகும். தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால் தமிழுக்கு கிடைத்த அறிய பொக்கிஷங்களில் ஒன்று விவேக சிந்தாமணி.

விவேக சிந்தாமணியை முழுவதும் படிக்க...
http://library.senthamil.org/344.htm

No comments:

Post a Comment

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...