Wednesday, January 08, 2014

இரசித்து படித்தது - 1

நாளை மற்றுமொரு நாளே..! என்று தான் நம் நாட்கள் அனைத்தும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஏதோ சில பிரச்சினைகள், சங்கடங்கள், சந்தோசங்கள்,ஏமாற்றங்கள், ரசனைகள் என நிறைக்கப்படது தான் நம் வாழ்கை பயணம். ஆனால் இதில் சில கணங்கள் மிகவும் சுவாரசியமாகவும், மனதிற்கு மிக அருகாமையிலும் அமைந்து விடுவது உண்டு. இது நிச்சயம், ஒவ்வருவரும் அவரவர்களின் madness இல் இருக்கும் போது, அந்த அற்புத கணத்தை அனுபவித்ரிக்கலாம்.

லயித்து கேட்டுகொண்டிருக்கும் பாட்டின் ஏதோ ஒரு எதுகை மோனை, இசையின் ஏதோ ஒரு bit ,  மனதை வருடி செல்லும் ஒரு கவிதை வரி, தனியே பார்த்துகொண்டு இருக்கும் திரைபடத்தின் ஏதோ ஒரு வசனம் அல்லது காட்சி, படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்  வரும் நெகிழ்ச்சியான வரிகள் என நம் ரசிப்பின் ஊடே பயணித்து அந்த கணத்தை அழகாக்கி விடுவது உண்டு. அந்த கணங்களை பதிவு செய்ய வேண்டும் என நினைத்ததின் விளைவே இந்த இரசித்து படித்தது.

தென் பாண்டியனின் கவிதை ஒன்று:
--------------------------------------------------

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும் - - -  அது பறந்து விட்டது

மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன் - - - அதுவும் பறந்து விட்டது

நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள்  - - - பறந்து கொண்டே இருந்தன

இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.




பாதசாரி எழுதிய காசி என்ற சிறுகதையில்:
---------------------------------------------------------------

தன் ஆசிரமத்திற்கு வந்தவனிடம் சாமியார்;

"கடவுள் நம்பிக்கை உண்டா?"

"இல்லே சாமி, ஆனா கடவுள்னு ஒருத்தர் இருந்துட்டா கூட பரவாயில்லைன்னு படுது சாமி"



இன்னும் ரசிப்போம்...

1 comment:

  1. தென் பாண்டியனின் கவிதை அருமை...

    ReplyDelete

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...