Monday, January 06, 2014

அராத்து - ஒரு புத்தக வெளியீடு

சாரு வாசகர் வட்ட உறுப்பினர் என்ற முறையிலும், அராத்துவின் அராஜக எழுத்தின் வாசகன் என்ற முறையிலும், அராத்துவின்  புத்தக
வெளியீடு பற்றி முக நூலில் (facebook ) பதிவு செய்தது.


முதல் முறையாக நமக்கு நடக்கும் எல்லாமே முக்கியமானதாகவும், போற்றி கொண்டாடப்பட்ட கூடியவையாகவே இருக்கின்றன. முதல் அழுகை, முதல் சிரிப்பு, முதலில் வாங்கிய முத்தம், முதல் உணவு, முதலில் தவழ்ந்த கணம், முதல் நடை, முதல் நண்பன், முதல் முறை பள்ளி சென்ற நாள், முதல் முறை படித்த பாடம், முதலில் விளையாடிய விளையாட்டு இப்படி  நிறைய முதல் நிகழ்வுகள் (சிலருக்கு முதல் காதல் கூட ) நம்மின் இளம் வயதிலேயே  நிகழ்ந்து விடுவதால் அதைபற்றிய கொண்டாட்ட நினைவுகள் நம்மிடம் இல்லை.

வாழ்வின் நிகழ்வுகளை மனம் இறுக்கி இருத்தி கொள்ளும் பிரயத்தில் நடக்கும் முதல்களில் முதன்மையானது முதலிரவு. சிலருக்கு அது முதல். சிலருக்கு, சில பல முதல் முயற்சிகள் முதலிலேய செய்திருந்தாலும், முழுமையானது முதலிரவே. அந்த தருணத்தை, அது தந்த எதிர்பார்ப்பை, அதனால் ஏற்பட்ட படபடப்பை ஒவொருவரும் வெவ்வேறு விதத்தில் எதிகொண்டோம் என்பதே உண்மை.

அது போன்றதொரு நிகழ்வே எழுத்தாளர்களுக்கு முதல் புத்தக வெளியீடு. அராத்துக்கு இது கன்னி எழுத்தல்ல. இதற்கு முன்னமே எழுத்துடன் அவர் நடத்திய விளையாட்டை காண (படிக்க) முக நூல் பக்கங்களில் கூடிய கூட்டத்தை நாம் அறிவோம். இலவசமாக எதை கொடுத்தாலும் கூட்டமாக அனுபவிக்கும் மனப்பான்மையுள்ள மனிதன், அதுவும் தமிழன், தன் கைகாசை செலவு செய்து, புத்தகம் வாங்கி, தன்னை படிக்கும் போது, அந்த எழுத்தாளன் அடையும் சுகத்தை இதுவரை எனக்கு தெரிந்து எவரும் பகிர்ந்து கொண்டது இல்லை.

அப்படியொரு உன்னத தருணத்தை இனிவரும் காலங்களில் அனுபவிக்க, ஆராத்துவை வாழ்த்துவோம். அவரின் இந்த இனிய முதலுக்கு பெருமை சேர்ப்போம்.


------------------------------
புத்தக வெளியீட்டு விழா - மைல் கல்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாரு வாசக வட்டத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டது அராத்துவின் புத்தக வெளியீடு. சென்ற வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம். முப்பதின் ஆரம்பத்தில் இருந்தார் மணமகன். கல்யாணத்தில் ஓடியாடி வெள்ளை செய்தது எல்லாம் ஒரு பதின் பருவ இளைஞர் பட்டாளம். விசாரித்ததில் மணப்பெண்ணின் தம்பியின் நண்பர்களாம். அவர்கள் வீட்டு திருமணத்திற்கு கூட இவ்வளவு அக்கறை காட்டியிருக்க மாட்டார்கள். நட்பு பொறுப்புணர்ச்சியை, உத்வேகத்தை கொடுக்கின்றது.  அராத்துவின்  புத்தக வெளியீட்டு விழாவில் இது மற்றுமொருமுறை நிருபனமகியது. நண்பர்கள் அனைவரும் தனக்கான விழாவாக, சாரு வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா போல் நினைத்து உழைத்ததில், தமிழ் இணைய / பதிப்பாக உலகின் புத்தக வெளியீட்டு விழாவிற்கான மைல் கல்லாக ஆனது. இது நிச்சயம் இன்னும் சில சோதனை முயற்சிகளை மேற்கொள்ள உத்வேகம் அளிக்கும். வாழ்த்துக்கள்.

(குறிப்பு: அராத்துவை இதுவரை நேரில் சந்தித்து இல்லை. எதிர்பாரத காரணங்களால்  புத்தக வெளியீடு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.)

No comments:

Post a Comment

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...