அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம். மூலவர் வரதராஜர் (தேவராஜர்). தங்க, வெள்ளி பல்லிகள் உள்ள திருத்தலம் எனில் அநேகருக்கு நினைவில் வரும்.
தன்னை தொட்டு வணங்கி செல்லும் பக்தர்களுக்கு, அவர்களுக்கான தோஷ நிவர்த்தி செய்யும் இந்த தங்க,வெள்ளி பல்லிகளின் தரிசனம் பெற, சிறிய மாடிப்படிகளில் ஏறி செல்லவேண்டும். அங்கு சூரிய சந்திரர்கள் சாட்சியாக நிற்க, பஞ்சலோகத்தினால் ஆன விதானத்தில் இருக்கும் பல்லிகளை தொட்டு வணங்கும் அனுபவம் ஆனந்தமானது. கௌதம முனிவரிடம் சாபம் பெற்று, வரதராஜரை சேவித்து சாப விமோசனம் பெற்ற இந்த பல்லிகளின் வரலாற்றை தவிர்த்து, அநேகர் அறியாத இத்தலத்தின் விசேஷம் ஒன்றை கூறவே இந்த பதிவு.
இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி ( மரத்தினால் செய்யப்பட்டது), மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, நீரை எல்லாம் இறைத்து விட்டு, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார். 1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து 2019 ம் ஆண்டு நடக்கும்.
தன் வாழ்நாளில் 1 or 2 முறை மட்டுமே காண முடிகிற, திவ்ய சௌந்தர்ய அத்தி வரத பெருமாளை நம் வாழ்நாளில் ஒரு முறையாவது காண, அந்த கருணா மூர்த்தியான மாதவனை வேண்டிகொள்வோம் .
நன்றி : http://anudinam.org
Interesting...
ReplyDeletethank u...
DeleteInteresting...
ReplyDelete