Wednesday, July 23, 2014

ஆண்கள்.... அழுகின்ற ஆண்கள்

அருண் வேந்தன் - என்ற நண்பர் தன் முக நூல் பக்கத்தில் எழதியது...

ஆண்கள் அழக்கூடாது..
அழுகின்ற ஆண்கள் கோழைகள்...
அழுகின்ற ஆண்களை நம்பக்கூடாது...
இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கழற்றி விட்டதா இயற்கை ஆண்களின் கண்ணீர் சுரப்பிகளை.
இலங்கை ராணுவம் விமானகுண்டுகளை வீசும்போது பள்ளிப்பிள்ளைகளை பதுங்குகுழியில் தள்ளி காப்பாற்றும் பொருட்டு மேலே கவிழ்ந்த முதியவன், சாமி...இந்த பிள்ளைகளை காப்பாற்ற நாதி இல்லையான்னு கதறியகாட்சியை இணையத்தில் கண்டபோது சிரிப்பா வரும்.
பள்ளிக்குசென்ற பெத்த பிள்ளையின் தலை பஸ்ஸின் சக்கரத்துக்கு கீழே வெடித்து கிடப்பதை கண்டு வெடிசிரிப்பா வரும் பெத்தவனுக்கு.
என்னதான் தாய்,தகப்பன் வயதாகி இறந்தாலும் ஈமச்சடங்கில் சுமந்துவந்த நெருப்பால், உயிர் தந்தவரின் உடலை எரிக்கும்போது அடிவயிற்றிலிருந்து மேலேறும் காற்றேற்றிய பலூனொன்று உதட்டுக்கு வெளியேவந்து வெடிக்குமே எச்சில் தெறித்து..அந்த ஆணும் கோழைதானா ?
நிற்கவும்,படுக்கவும்,நடக்கவும் இயலாமல் விழிகளில் வேதனை தெறித்து நிற்கும் மனைவியை,பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு,மருத்துவமனை மரத்தடி திண்ணையில் கண்ணீர் கசியாமல் பன்னீரா வரும்...
படும்மா...படும்மா..என்றாலும் கேளாமல் இரவெல்லாம் படிக்கும் மகள் பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண்களோடு ஓடிவந்து புறாக்குஞ்சு போல் மார்பில் ஒண்டும்போது ஈரம் பிசுபிசுக்காத கண்களும் உண்டா ?
பெரும்குரலெடுத்து அழும் தருணம் எந்த நேரமும் வரலாம். நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் .ஆண்கள் மடையும் உடையும்... அந்த கண்ணீர் துக்கம், திணறல், மகிழ்வு, கழிவிரக்கம், ஏக்கம்,தோல்வி எல்லாவற்றையும் சுமந்துசெல்லும்.
இன்னொன்றும் உண்டு...பத்து நிமிட அழுகைக்கு பின்பு முகம் கழுவும் ஆண் எதிரில் கடவுள் வந்தால் அவனையும் வெல்வான்.
- அருண் வேந்தன்

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...