Thursday, November 20, 2014

ஆஹா சுவாமி அருமை

சுருண்ட கூந்தலும் சுடர் கண்களும் 
சங்கு கழுத்தும் பொங்கு முலையும்
ஆலிழை வயிறும் அண்ணாந்த காம்பும்
குடைந்த தொப்புளும் புடைத்த பிருஷ்டமும்
விறைத்த தொடையும் விழாதக் கெண்டைகாலும்..
கொண்ட பெண்டீர் புணர்ந்தால்..
புகுவான் புத்தாயுள் பேரழகன்.
என்றெழுதி சோர்ந்திருந்து ஏறிய நெற்றியுடன்
ஏக்கமாய் பெருமூச்செறிந்த கணவன்..
தன் கூன் போட்ட முதுகையும் தளர்ந்த கைகளையும்
ஒருமுறை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு ,
மனைவியிடம் கேட்டான் கருத்தை.

கரிய உருவமும் சிவந்த அதரமும்
கலைந்த ஈர சுருள் முடியும்..
திண்ணிய மார்பும் தினவெடுத்த தோளும்
ஒட்டிய வயிறும் ஓங்கிய தொடைகளும் கொண்ட..
கள்ளக்காதலனை கண்டால் கற்பையும் இழப்பேன் என
கடைவாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு,
'ஆஹா சுவாமி அருமை' என்றாள் மனைவி.. கணவன்
எழுதித்தந்து கருத்துக்கேட்ட கவிதை பற்றி.


-- அருண் வேந்தன் - என்ற நண்பர் தன் முக நூல் பக்கத்தில் எழதியது...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...