Monday, January 20, 2014

மக்பெத் ( ஷேக்ஸ்பியரின் நாடக கதை ) - பாகம் -1

Story of Shakespeare's Drama Macbeth

ஸ்காட்ட்லண்டின் அரண்மனை. அரசர் டன்கின் க்கு எதிரில், உடல் எங்கும் காயங்களுடன் வீரன் ஒருவன் நின்றிந்தான். அவன் முகத்தில் அளவு கடந்த பெருமிதம் தெரிந்தது. அவன், எல்லையில் நார்வே நாட்டுடன் நடந்த போரில் தாங்கள் வெற்றி பெற்றதையும், அதில் வீரமாகவும், மிக உக்கிரமாகவும் போர் புரிந்த தளபதிகள் மக்பெத் மற்றும் பாங்கோவை பற்றியும்  சொல்லிக்கொண்டு இருந்தான். குறிப்பாக தளபதி மக்பெதின் வீர விளையாட்டையும் அவர் வாள் வீச்சில் எதிரிகள் தலை உருண்டு ஓடியதையும் விவரிக்க, அரசரின் முகத்தில் எல்லையில்லாத பெருமிதம்.  இதை மேலும் மூன்று ஜோடி கண்கள் ஒரு வித குருரத்துடன்  பார்த்து கொண்டிருந்ததை அங்கிருப்பவர்கள்  யாரும் அறியவில்லை. அவை எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க வல்ல சூனியக்காரிகளின் கண்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ விவாதித்துவிட்டு, "நாம் தளபதி மக்பெதை அடுத்து சந்திப்போம்" என அங்கிருந்து அகன்றனர். அந்த நேரத்தில் அவர்கள் கண்களில் இருந்த குருரம் ஏதோ தீயது நடக்க போகிறது என்பதை உணர்த்தியது.

மக்பெத்தும்  பாங்கோவும் தங்கள் வெற்றிப் படைகளை பின்னே வர செய்துவிட்டு, இரு குதிரைகளில் மிக விரைவாக தலைநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். வழியில் அடர்ந்த காடு. அதை கடந்து கொண்டிருந்தபோது தூரத்தே இருந்த குடிசையில் இருந்து கீச்சு குரலில் பேச்சு குரல் கேட்டது. அடர்ந்த கட்டில் தனியே இருந்த குடிசை எழுப்பிய ஆச்சர்யத்தை புறந்தள்ளிவிட்டு இருவரும் அதை நோக்கி தங்கள் குதிரையை விரட்டினர். உள்ளே மூன்று சூனியக்காரி கிழவிகள் தங்களுக்குள் ஏதோ சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"ஏய் கிழவிகளே... யார் நீங்கள்? இங்கு என்ன செய்து கொண்டிருகிறிர்கள்?"

"வீரர்களே... நாங்கள் நாளை நடப்பதை இன்றே சொல்லும் திறன் படைத்தவர்கள். இதோ இங்கே நிற்கும் மக்பெதின் எதிர் காலம் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம் " என்றாள் ஒரு சூனியக்காரி.

"என் எதிர்காலம்  பற்றி நீங்கள் ஏன் பேச வேண்டும்?" - மக்பெத்

"ஏன் என்றால்  உங்கள் எதிர்காலம், இந்நாட்டின் எதிர்காலம்" என்றாள் மற்றுமொரு சூனியக்காரி. குழப்பத்துடன் இரு தளபதிகளும் நோக்க... மக்பெதின் எதிகாலம் பற்றி உரைக்க தொடங்கினர்.

"மக்பெத், இன்னும் சிறிது நாளில் நீ கவ்டர் பகுதியின் அதிபர் ஆவாய். அதோடு இந்த ஸ்காட்ட்லண்டின் மன்னனாக கூடிய விரைவில் முடிசூடி கொள்ள போகிறாய். உனக்குப் பின் இதோ இந்த பாங்கோ வின் வழிகாட்டுதலின் பேரில் புதிய ஆட்சி தழைக்கும்". என்று கூறி விடை பெற்று மறைந்தனர் கிழவிகள்.

பாங்கோ இந்த ஆருடத்தை நம்பவில்லை. ஆனால் இது, மக்பெதின் உள்ளத்தில் ஆசை தீயை மூட்டி விட்டது. எஞ்சிய பயணம் முழுவதும் அவன் முகத்தில் எதிரொலித்த பல்வேறு முக பாவங்கள், அவன் எண்ணங்கள் முழுவதும் இதை பற்றியே சுற்றி கொண்டு இருப்பதை காட்டி கொடுத்தன.

வெற்றித் தளபதிகள் இருவர்க்கும் ஆடம்பரமான வரவேற்ப்பை மக்களும் மன்னரும் அளித்தனர். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அரசர், போரில் இறந்த காவ்டர் பகுதியின் அதிபதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு அதிபதியாக இனிமேல் மக்பெத் இருப்பார் என்று அறிவித்தார்.

சூனியக்காரியின் ஆருடங்களில் ஒன்று இவள்ளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதை எதிர்பார்க்காத மக்பெத் உள்ளத்தில், அடுத்த அரசன் நான் தான் என்னும் சூறாவளி வீசத் தொடங்கியது.  கூடிய விரைவில் "நானே மன்னன்" என்ற எண்ணம் பலமாக இருந்தாலும் அரசர் தன்கினும் இளவரசர்கள் மால்கம் மற்றும் டொனல்பென் இருக்கும் பொழுது அது எங்கனம் சாத்தியமாகும் என்ற குழப்பத்துடன் வீடு சேர்ந்தான்.


அங்கு, லேடி மக்பெத், காவ்டர் பகுதியின் புதிய அதிபதியான தன் கணவரை வரவேற்க ஆடம்பரமான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தாள். விழாவில் கணவனின் முகத்தில் ஓடிய மெல்லிய குழப்ப ரேகையை கவனித்தவள் தனிமையில் அதை விசாரிக்க, நடந்த அனைத்தையும் விவரிக்கிறான் மக்பெத். மனதில் நினைத்ததை எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிடும் திட மதி படைத்த லேடி மெக்பெத், தன் கணவன் இந்நாட்டின் அரசனாவது உறுதி என்பதை முழுவதும் நம்பியதோடு தன்னை அரசியாகவே கற்பனை செய்ய தொடங்கிவிட்டாள். அரிதினும் அரிதான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும் போது நாமும் அதனை அடைய, நம் சூழ்நிலைகளை சூழ்ச்சிகளின் மூலம் மாற்ற வேண்டும். எந்த ஒரு அரசியல் மாற்றமும் சூழ்ச்சியின்றி உருவாவதில்லை என பலவாறாக பேசி தன் கொடூர திட்டத்திற்கு கணவனை உடன்பட வைக்கிறாள். அரசனை கொன்று, மக்பெத் அரசனாகும் வழியை ஆலோசிக்க தொடங்குகிறாள். அதற்கு தோதனதொரு வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது.. காவ்டர் பகுதியின் அதிபராக மக்பெத் பதவி ஏற்கும் விழாவில், அரசரை விருந்துண்ண அழைக்க அரசரும் மக்பெதின் விடுதிக்கு வர ஒத்துக்கொள்கிறார்.


மிக ஆரவாரமாக அரசர் டான்கின்யையும், அவர்தம் மெய்காவலர்களையும் வரவேற்கும் மக்பெத் தம்பதியினர் அவர்கள் குடிக்கும் மதுவில் மயக்க மருந்து கலக்கி தூங்க செய்கின்றனர். மக்பெத் தூக்கத்திலேயே அரசனை வாளால் வெட்டி கொன்று விட, மயக்கம் களைந்து எழுந்த காவலாளிகளை, மன்னரை பாதுகாக்கத் தவறியவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்கள்  அனைவரையும் கொள்கிறான் மக்பெத். அரசர் டன்கின் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட இளவரசர்கள் மால்கம்,டோனால் இருவரும் தப்பி ஓடி இங்கிலாந்த் மற்றும் அயர்லாந்து-ல் தஞ்சம் அடைகின்றனர். எதிர்ப்பே  இல்லாத நிலையில் மக்பெத் ஸ்காட்லான்ட் நகரின் அரசனாக மூடி சூடிகொள்கிறான்.

தொடரும்...

Story of Shakespeare's Drama - Macbeth - Part 2 

1 comment:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...