Thursday, January 16, 2014

இரசித்து படித்தது - 2

சில கவிதைகளோ, ஒரு கவிதையின் சில வரிகளோ, சில கதைகளின் ஊடே சொல்லப்பட கருத்துகளோ, அவை  எங்கே, எப்போது படிக்கப்பட்டன என்பதை எல்லாம் தவிர்த்து மனதிலே பதிந்து விடுவது உண்டு. அதில் இப்போது நினைவில் வரும் சில...



பலத்தக் காதல்
பெய்த ஒரு நாளில்
அவளிடம் என்
மழையைச் சொன்னேன்!!!








எழுதபடிக்க தெரியாதவனில்
                         எமனும் ஒருவன்...
அழகிய கவிதைபுத்தகத்தை கிழித்துவிட்டான்.
           --கண்ணதாசனுக்கு வாலி எழுதிய இரங்கல் கவிதை



இறைவன்

வாழ்க்கை எனும் சதுரங்க விளையாட்டில்
       காய்களை நாம் நகர்த்தும்போது,
நமக்குத் தெரியாமல்
      கட்டங்களை நகர்த்துபவன்...








ந்யூட்டன் சமாதியில் காணப்படும் வாசகம்..
இயற்கையும் அதன் விதிகளும்
இருட்டில் மறைந்து இருந்தன..
ந்யூட்டன் உண்டாகக்கடவது
என்றார் தேவன்
எல்லாம் வெளிச்சமாயிற்று


இன்னும் ரசிப்போம்...

2 comments:

  1. அருமையான ரசிப்பு.... இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. photos are good... nice collection...

    ReplyDelete

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...