Tuesday, December 10, 2013

குற்றால சாரல்

திண்டுக்கலில் நங்கள் வசித்த நாகல் நகர் பகுதியில் வருடம் முழுமைக்கும் சுற்றுலா ஒரு முதன்மையான பொழுது போக்காகும். ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா, இன்ப சுற்றுலா, சாரல் சுற்றுலா என்று எதாவது போஸ்டர் கண்ணில் தட்டுபட்டு கொண்டே இருக்கும். அதுவும் பொங்கலுக்கு அடுத்து நாங்கள் கொண்டாடும் அம்மன் பண்டிகையை ஒட்டி, நெசவு தொழிலுக்கு விடுமுறை. அப்போது அம்மனை நிராதரவாக விட்டுவிட்டு உல்லாச சுற்றுலா கிளம்பி விடுவோம். உல்லாச சுற்றுலா மற்றும் கறி விருந்து க்கு என்றே மாதாமதம் சீட்டு சேர்க்க நிறைய குழுக்கள் அன்று இருந்தன.

இதில் குற்றால சீசன் காலமான ஆணி, ஆடியில் போடப்படும் சாரல் சுற்றுலாவிற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். அதை நினைக்கும் போதே சாரலடிக்கும் ஈர நினைவுகள். ஆரம்பத்தில் இந்த சுற்றுலா முறை பரவலாக இல்லை. அப்போது நாங்கள் மாமா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி என்று குடும்பமாக குற்றாலம் சென்று சமைப்பதற்கு வசதியுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து கொள்வோம். ஒரு நாளைக்கு 5 or 6 முறை அருவி குளியல் இருக்கும். விளையாட்டு, ஒய்வு, குளியல், நிறைவான உணவு, அருமையான சாரல் என ஒரு கலவையான அனுபவம், 30 வருடத்திற்கு பின்னும் அதே ஈரத்துடன் நெஞ்சில் நிழலாடுகிறது.

சுற்றுலா முடிந்து திரும்பி வந்த நாட்களில், நண்பர்களுடன்  அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் இன்று  நினைவில் இல்லை என்றாலும் அந்த வயதிற்கான எங்களின் சிலாகிப்புகள், மகிழ்சிகள் நினைவில் அப்படியே தங்கி உள்ளன.

இரண்டொரு நாளில் மீண்டும் அடுத்த வருட குற்றால சாரல் சுற்றுலாவிற்குரிய திட்டமிடல் தொடங்கிவிடும்.

1 comment:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...