Monday, December 09, 2013

எஸ்.ரா. வின் புத்தக வெளியீட்டு விழா




களம் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய, எழுத்தாளர் S ராமகிருஷ்ணனின் 10 நூல்கள் வெளியீட்டு விழா திருச்சியில் 08-12-2013 அன்று நடந்தது. இத்தகைய புத்தக வெளியீட்டு விழாக்கள் எப்போதும் சென்னை யில் மட்டுமே நடைபெறுவதால் அதில் கலந்து கொள்ள போடப்படும் திட்டம் எல்லாம் வேலைப்பளு மற்றும் குடும்ப சூழ்நிலையால் தடை பட்டு போவது வழக்கம். திருச்சியில் என்பதால் விழா நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்து கலந்து கொண்டது மிக திருப்தியாக இருந்தது. 

எழுத்தாளர் எஸ். ரா. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய தங்கு தடையில்லாத எழுத்துகள், கதை படிக்கும் ஒருவரை அவர் அனுமதி இன்றியே கதைக்குள் இழுத்து செல்லும் பாங்கு அற்புதமான அனுபவமாகும். இந்த கலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா வல்லவர். அவருடைய கட்டுரைகள், சிறு கதைகள், நாவல்கள் மற்றும் இணைய கடிதங்கள் என்ற எல்லா format களிலும் அதனை நிருபித்திருபார். அதோடு தான் ஒரு பாத்திரமாகவும்,   படிக்கும் வாசகனை ஒரு பாத்திரமாகவும் மாற்றி இரண்டு பேருக்கும் நடுவில் இணக்கத்தை ஏற்படுத்தும் கலையில் வல்லவர். ஆனால் அவர் எடுத்து கொள்ளும் களங்கள், உத்தம புத்திரராகிய தமிழர்களால் ரசிக்கபட்டாலும் பொது வெளியில் பரந்து பட்ட பாராட்டை பெறவில்லை என்பதே உண்மை. அந்த வகையில்  மிக பரந்துபட்ட வாசகர்களால் ஏற்றுகொள்ளபட்டவரும் commercial hit அடித்த  எழுத்தாளர் சுஜாதாவிற்கு  அடுத்து commercial successful எழுத்தாளர் என்று எஸ்.ரா. வை சொல்லலாம்.

எஸ்.ரா. வின் 10 நூல்களை பற்றி கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர் எஸ்.பெருமாள், கவிஞர் நந்தலாலா மற்றும் எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆகியோர் பேசினர். விழா விற்கு நான் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதால், கவிஞர் மனுஷ்ய புத்திரனின் வாழ்த்துரையை தவற விட்டுவிட்டேன். எஸ்.ரா. வின் சிறுகதைகளை பற்றி பேசிய நந்தலாலா வின் சிலாகிப்புகள் நயம். டெய்சி அப்படித்தான் என்ற  எஸ்.ரா. வின் சிறுகதை பற்றி என் மனதில் இருந்த கருத்தை அவரும் வெளி மொழிந்தார்.

எஸ்.ரா. வின் ஏற்புரை மிகவும் நயமுடன், முதன் முறை அவர் பேச்சை கேட்கும் எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது. நன்றி.

பின்குறிப்பு: ரூ 920 மதிப்புள்ள 10 புத்தகங்களையும் ரூ.700 என்று அறிவித்துவிட்டு, விழா முடியும் தருவாயில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.200 குறைத்து கொண்டது அதிகம் பேர் வாங்க வழி வகுத்தது. ( கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் காலியாகி முன் பதிவு வரை சென்றது தமிழர்களின் தள்ளுபடி வியாபார மனோபான்மையை மற்றுஒரு முறை நிருபித்தது.)

3 comments:

  1. I want to comment but dont know how to type in Tamil. Guide me as it will be helpful for those who dont know or first time doers.
    -Suruli

    ReplyDelete
  2. hi suruli,
    I have used the following link to type in tamil.
    http://tamil.changathi.com/

    ReplyDelete
  3. Good Babu. Keep writing.
    -Dinesh

    ReplyDelete

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...