Thursday, December 12, 2013

கர்ணன் - பரசுராமர் ஒரு நெகிழ்ச்சி

நேற்று vijay TV யில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் கர்ணன் பரசுராமர் தொடர்பான காட்சி எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அவரவர் செய்யும் தொழில்கள் அவர்களது குலம் சார்ந்தே இருந்த காலகட்டத்தில் கல்வி முறையும் அதை ஒட்டியே இருந்தன. குலத்தின் அடிப்படையில் கற்க வேண்டிய கல்வியும், செய்ய வேண்டிய தொழிலும் வரையறுக்கப்பட்டதால், மற்ற தொழில்களை பற்றிய நடைமுறை அறிவு மற்றும் அதை சார்ந்த நுட்பங்களையும் ஒருவன் தெறித்து கொள்ள முடியாத நிலையே அப்போது காணபட்டது. இதுவே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் / சந்ததியினர் ஒரே தொழிலை செய்ய காரணமாக இருந்ததுடன் தொழில் சார்ந்து உயர்குலம், தாழ்குலம் என பாகுபாட்டையும் ஆரம்பித்து வைத்தது.

இந்த கால கட்டத்தில் தான் தேரோட்டி குலத்தில் வாழ்ந்த (பிறந்த அல்ல ) கர்ணன் உயர் குலத்தினர் கற்கும் போர் கல்வி முறையை கற்க விரும்பினான். தான் விரும்பும் கலையை கற்க தனக்கு உரிமை உண்டென்ன மிகவும் நம்பினான். ( குலக் கல்விக்கான எதிர்ப்பு அப்போதே பதிவு செய்யப்பட்டுவிட்டது. ) அப்போதிர்ந்த வழக்கப்படி அது கர்ணனுக்கு மறுக்கப்பட்டது. கலை பயிலும் ஆர்வத்தில், பிராமணர்க்கு மட்டும் போர்க்கலைகள்  கற்று தரும் பரசுராமரிடம் தான் பிராமணன் என்ற பொய்யுரைத்து கலைகளை கற்கிறான். பாடங்கள் முடிந்து ஒரு ஒய்வு தருணத்தில் குருவின் நித்திரைக்கு தன மடியை தலையனையாக்க, எதிர்பாராமல் வண்டு ஒன்று துடையை துளைக்க, குருதி பெருகும் நிலையிலும் குரு நித்திரைக்கு பங்கம் வாரா வண்ணம் பொறுத்திருக்க அதுவே அவனுக்கு வினையாகிறது. ஒரு பிராமணரால் இவ்வளவு வலியை பொறுக்க முடியாதே என்ற சந்தேகத்துடன் குரு வினவ கர்ணன் உண்மையை ஒப்புக் கொள்கிறான். கோபம் கொண்ட பரசுராமர், கர்ணன் கற்றுகொண்ட கலை, அது தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் அவனக்கு கை கொடுக்காது என சாபமிடுகிறார்.

நாம் கல்வி கற்பதே அது தேவைப்படும் இடத்தில உபயோகபடுத்தவே. கற்ற உயர் கல்வியின் பயனை  ஒரு தாழ் குலத்தினன் அனுபவிக்க கூடாதா? குல கல்வி முறை தவறு என பதிவு செய்த ஆசிரியர் அதை மீறும் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தண்டனையை கொடுத்து குலக் கல்விக்கு ஒத்து ஊதுகிறாரே என்ற ஐயம் என்னுள் இருந்தது.

ஆனால் நேற்றைய தொடரில் தன் அருமை சீடருக்கு சாபம் ஏதும் விடவில்லை என்றும் கர்ணன் பொய்யுரைத்து கற்றானே என்ற வருத்தத்தில் உரைத்ததாக காட்சிபடுத்தி உள்ளது நெகிழச் செய்தது. அதிலும் பரசுராமர் வாய் வார்த்தையாக, "உண்மையை சொல்லி உன் ஆசையை நியாயப்படுத்தி அதற்காக முயற்சித்துக்கொண்டே ( கவனிக்கவும் முயற்சித்துக்கொண்டே) இருந்திந்தால் நானோ அல்லது வேறு ஒருவரோ உனக்கு நிச்சயம் போதித்திருப்பர். ஆனால் பொய்யுரைத்து, குருவை ஏமாற்றி நீ கற்றுக்கொண்ட கலையானது உலக சத்திய தர்மபடி தேவையான பொழுது உனக்கு கை கொடுக்காமல் உன்னை நிர்கதியாய் தவிக்க வைத்து விடுமே.... மகனே" என்று புலம்புவதாக அமைத்து இருந்தது பரசுராமர் பாத்திரத்தின் மேல் மேலும் மதிப்பு உயர வழி வகுத்தது.

குலக்கல்விக்கு எதிராக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு சத்தியத்துடன் போராடிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் உங்கள் எண்ணம் ஈடேறும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"சிந்தித்து செயலாற்றுங்கள்"

2 comments:

Type your comments...

கடுகளவு காதல்

  உச்சி ஆதவனின் உஷ்ணத்தில் காலை சுக வெயில் நினைவுக்கு வருவதில்லை .   ஆரோக்கிய விவாதம், ஆதங்கங்களின் வரிசையாக, அடுத்தவர் மீ...